தமிழகத்தில் ஆளும் அரசு வீழும், வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் வரும் 19ம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; அவர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தெரிவித்திருந்தார். இது பலரின் எதிர்ப்பை சந்தித்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில், 15ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, இந்து தீவிரவாதி குறித்து நான் பேசியது முற்றிலும் உண்மைதான். உண்மை எப்போதும் கசக்கும் என்பதை இங்கு எல்லோரும் அறிவர். நான் அரவக்குறிச்சியில் நிறைய பேசினேன். ஆனால் ஊடகங்களோ, நுனிப்புல்லை மேய்ந்தவாறு என் பேச்சின் சிறுபகுதியை மட்டும் எடுத்து அதை பெரிதாக்கிவிட்டார்கள். என் மீது வழக்குகள் பாயும் என்று சிலர் எச்சரிக்கின்றனர். ஒரு தடவை கூறிய என்மீதே வழக்குகள் எனில், பலமுறை கூறிய ஊடகங்கள் மீதும் வழக்குகள் பாயும் என்பதை ஊடக நண்பர்கள் மறந்துவிட வேண்டாம்.
இந்த அரசு வீழும், வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்துவோம். ஜனநாயக முறையில் வீழ்த்துவோம். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இத்தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொள்வதாக கமல் கூறினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Kamalhassan election compaign at thirupparankundram
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி