/tamil-ie/media/media_files/uploads/2022/12/Kamal-Haasans-film-with-Mahesh-Narayanan-is-still-on-cards-Image_-Kamal-Haasan_Instagram.jpg)
தாய்மொழி எமது பிறப்புரிமை, ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி ஜான் பிரிட்டாஸ் ஐ.ஐ.டி.,களில் ஹிந்தியை பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய விடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சு
அதில், ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்து விடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.,க்கள் கனிமொழி, ஆ.ராசா, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அந்த ட்விட்டை மேற்கோள்காட்டி புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும். 75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும். ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும். இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ” https://t.co/HLIcAHSpnb
— Kamal Haasan (@ikamalhaasan) December 25, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.