கமலின் இந்து தீவிரவாதி பேச்சிற்கு தி.க. தலைவர் வீரமணி ஆதரவும் ; மாநில பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அது நாதுராம் கோட்சே தான் என்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வீரமணி ஆதரவு : கமலின் இந்து தீவிரவாதி பேச்சிற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, கமல் கூறியதில் எவ்வித தவறும் இல்லை. நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் என்பதை யாரும் மறுக்கஇயலாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை கடும் கண்டனம் : தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், கமலின் இந்து தீவிரவாதி பேச்சிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தனது எதிர்ப்பை, அவர் பல்வேறு பதிவுகளாக போட்டுள்ளார்.
அவை வருமாறு..
இந்து தீவரவாதம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் கமல்ஹாசனைக் கண்டிக்கிறோம்.பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும்இவர்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று கமல் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை!ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி?அரசியல்நடிப்பு???
மகாத்மாவின் படுகொலையை கண்டித்து நாடே பதறியது. கொலையாளி தூக்கிலிடப்பட்டார்ஆனால் அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது விஷமத்தனமானதும் ஆபத்தானதும் கூட.புதிய அரசியலை. முன்னெடுப்பதக்க்கூறும் கமல் பழையதை கையில்எடுப்பது மதவிஷம் பரப்பி வரும் ஓட்டுக்காகத்தானே?அரசியல்வேஷம் என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
ஹெச்.ராஜா கண்டனம் : முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம. முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்காத கோழை.
என்று ஹெச்.ராஜா தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.