கமலின் விஸ்வரூபம் தேர்தலிலும் எதிரொலி : 12 தொகுதிகளில் 3வது இடம்

தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியே நிகழ்த்த இயலாத இந்த சாதனையை, களம் கண்ட முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

kamal, makkal needhi maiam, loksabha elections result, bjp, third place, கமல், மக்கள் நீதி மய்யம், மக்களவை தேர்தல், பாரதிய ஜனதா
kamal, makkal needhi maiam, loksabha elections result, bjp, third place, கமல், மக்கள் நீதி மய்யம், மக்களவை தேர்தல், பாரதிய ஜனதா

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, லோக்சபா தேர்தலின் 12 தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்து தனது விஸ்வரூபத்தை காட்டியுள்ளது.

542 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம், அண்ணா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் , நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக தேர்தலை சந்தித்தது.

3வது இடம் : வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, சேலம், மதுரை, திருவள்ளூர் ஆகிய 11 லோக்சபா தொகுதிகளிலும் புதுவை யூனியன் பிரதேச லோக்சபா தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

14 மாத குழந்தையை மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர் : கமல்ஹாசன்

திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியபோது அவர்கள் ஒரு வாக்கு கூட வாங்கமாட்டார்கள் என்று பலர் எதிர்பார்த்தநிலையில், திமுக, அதிமுக கட்சிகளின் வாக்குகளை பெரும்பாலும் கமலின் கட்சியே பிரித்தது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.

தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியே நிகழ்த்த இயலாத இந்த சாதனையை, களம் கண்ட முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kamals makkal needhi maiam party keeps top 3 places in twelve constituencies

Next Story
தலை தப்பித்ததா அதிமுக ஆட்சி? அந்த 3 எம்.ஏல்.ஏக்கள் கையில் தான் எல்லாமே இருக்கு!Tamil Nadu news today
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com