Advertisment

14 மாத குழந்தையை மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர் : கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் என்ற 14 மாத குழந்தையை, மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசும் அளவிற்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

மக்கள் நீதி மய்யம் என்ற 14 மாத குழந்தையை, மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசும் அளவிற்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நாங்கள் நேர்மையான வழியில் பயணிப்பது நம்பிக்கையளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisment

லோக்சபா தேர்தலில், அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி கூட நிகழ்த்தாத இந்த சாதனையை, களம் கண்ட முதல் தேர்தலிலேயே மக்கள் நீதிமய்யம் கட்சி நிகழ்த்தி காட்டியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனது தொழில் அரசியல் அல்ல. எனது தொழில் கலை தான். மக்கள் நீதி மய்யம் கட்சி, அரசியலை எப்போதும் தொழிலாக பார்க்காது. அது தவறான ஒன்று. அரசியல் கட்சியின் மூலம், மக்களுக்கு நல்லது செய்து அதன்மூலம் பணம் சம்பாதிப்பதே கட்சியின் கொள்கை.

கமலின் விஸ்வரூபம் தேர்தலிலும் எதிரொலி : 12 தொகுதிகளில் 3வது இடம்

இந்த தேர்தலில், அதிமுக, திமுகவிற்கு மாற்றுக்கட்சி என்ற பெருமையை மக்கள் நீதிமய்யம் கட்சி பெற்றுள்ளது. இனி வரும் தேர்தல்களில் இன்னும் முனைப்புடன் செயல்பட்டு முதலிடம் வர முயற்சிப்போம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை, அந்த கட்சியின் பி டீம், இந்த கட்சியின் பி டீம் என்று சொன்னவர்களை, இந்த தேர்தல் முடிவுகள், மக்கள் நீதி மய்யம் கட்சியை நேர்மையின் A டீம் என மக்கள் நிரூபித்துள்ளனர். அந்த மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கிராமப்புறங்களில், மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறாததற்கு காரணம் பாதுகாக்கப்பட்ட ஏழ்மை தான் காரணம். பணப்புயல்களுக்கு இடையே, மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த அளவிற்கு வெற்றி பெற்றதே சாதனை தான்.

மக்கள் நீதி மய்யம் என்ற 14 மாத குழந்தையை, மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசும் அளவிற்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நாங்கள் நேர்மையான வழியில் பயணிப்பது நம்பிக்கையளிக்கிறது.

மோடிக்கு கோரிக்கை : பிரதமர் மோடி, தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக பார்க்கவேண்டும். நீங்கள் வெற்றி பெற்ற மாநிலங்களைவிட, தமிழகத்திற்கு அதிக முக்கியத்தும் தரவேண்டும் என்று மோடிக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Kamal Haasan Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment