காஞ்சிபுரம் மாவட்டம் மானம்பதி பகுதியில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரையடுத்த மானம்பதி கங்கையம்மன் கோயிலில் குளம் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர் அப்போது அப்பகுதியில் மர்மப்பொருள் இருந்ததை, அந்த தொழிலாளர்கள் பார்த்தனர். அந்த தொழிலாளர்களில் ஒருவர் அதை திறக்க முற்படும்போது அது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக வெடித்தது.
இந்த சம்பவத்தில் ஆறு தொழிலாளர்களும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சைபலனின்றி மரணமடைந்தார்.
அந்த எந்த வகையான மர்மப்பொருள், வெடிகுண்டாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாநில வெடிகுண்டு தடுப்பு படையினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையினரின் தகவலை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.