Kancheepuram Election Results 2024 Live Update: காஞ்சிபுரம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
தி.மு.க வேட்பாளர் ஜி. செல்வம் வெற்றி
காஞ்சிபுரம் மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜி. செல்வம் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிகையின் முடிவில், தி.மு.க வேட்பாளர் ஜி. செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்று, 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராஜசேகர் இ, 3,64,571 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.
பா.ஜ.க கூட்டணியில், பா.ம.க சார்பில் போட்டியிட்ட ஜோதி வி, 1,64,931 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.
இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சித் தலைவர் சந்தோஷ் குமார் வி 1,10,272 வாக்குகள் பெற்றார்.
அடுது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட இளையராஜா எஸ் 5,264 வாக்குகள் பெற்றார்.
மதியம் 3 மணி நிலவரப்படி: 11 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில், காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஜி. செல்வம் முன்னிலை வகிக்கிறார்.
காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஜி. செல்வம் 2,71,229 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அ.தி.மு.க வேட்பாளர் ராஜசேகர் 1,68,828 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பா.ம.க வேட்பாள வி. ஜோதி 53,748 வாக்குகள் பெற்றுள்ளார்.
12 மணி நிலவரப்படி:
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஜி. செல்வம் முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தொகுதியில் 1951-ம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியானது, செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஆகும்.
காஞ்சிபுரம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 17,32,946, ஆண் வாக்காளர்கள்: 8,46,016, பெண் வாக்காளர்கள்: 8,86,636, மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 294 ஆகும். 2024 மக்களவைத் தேர்தலில் 1253582 வாக்குகள் பதிவாகி 71.68 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தனித் தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் ஜி. செல்வம் உதயசூரியன் சின்னத்திலும், அ.தி.மு.க சார்பில் இ. ராஜசேகர் இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் வி. ஜோதி மாம்பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் வி. சந்தோஷ் குமார் மைக் சின்னத்திலும் போட்டியிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வரலாறு:
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி என பெயரிடப்பட்டு 1951-ம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, தொகுதி மறுவரையறையில் காஞ்சிபுரம் தொகுதியில் மக்களவைத் தொகுதி இடம்பெறவில்லை. அதற்குப் பிறகு, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையின்படி, 2009-ம் ஆண்டு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு 2024 தற்போது வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
15வது மக்களவைத் தேர்தல் (2009)
2009-ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம். கிருஷ்ணசாமி 3,30,237 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க சார்பில் எதிர்த்து போட்டியிட்ட இ. இராமகிருட்டிணன் 3,17,134 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட டி. தமிழ்வேந்தன் 1,03,560 வாக்குகள் பெற்றார்.
16 வது மக்களவைத் தேர்தல் (2014)
2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே. மரகதம் 4,99,395 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட, ஜி. செல்வம் 3,52, 529வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதே போல, ம.தி.மு.க சார்பில் போட்டியிட்ட மல்லை சத்யா 2,07,080 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஸ்வநாதன் 33,313 வாக்குகள் பெற்றார்.
17-வது மக்களவைத் தேர்தல் (2019)
2019-ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜி. செல்வம் 6,84,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே. மரகதம் 3,97,372 வாக்குகள் பெற்று பெற்று தோல்வி அடைந்தார். நா.த.க சார்பில் போட்டியிட்ட சிவரஞ்சினி 62,771 வாக்குகள் பெற்றார். அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட முனுசாமி 55,213 வாக்குகள் பெற்றார்.
18-வது மக்களவைத் தேர்தல் (2024)
இந்நிலையில், 18-வது மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் ஜி. செல்வம் போட்டியிட்டுள்ளார்.
அ.தி.மு.க சார்பில் இ. ராஜசேகர் போட்டியிட்டுள்ளார்.
பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் வி. ஜோதி போட்டியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வி. சந்தோஷ் குமார் போட்டியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.