Janardhan Koushik
Kancheevaram Athi Varadar : இந்த 48 நாளும் கோலகலமாகவே தான் இருக்கும் என்று இருக்கிறது. 40 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பெரும் உற்சவமாக காஞ்சியில் நடைபெறும், அத்திவரதரின் தரிசனம் ஒவ்வொரு நாளும் மக்களை ஈர்த்த வண்ணமே இருக்கிறது.
ஜூலை 1ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் தோராயமாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் தான் வருவார்கள் என்று எண்ணி ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது காஞ்சி மாவட்ட நிர்வாகம்.
ஆனால் அவர்களின் கற்னைக்கும் எட்டாத வகையில் 2-அரை லட்சம் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு வந்து அத்தி வரதரை தரிசனம் செய்து விட்டு செல்கின்ற்னர்.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் 9 அடி நீளம் இருக்கும் அத்தி வரதர் அக்கோவில் தெப்பக்குளத்தில் தான் 40 வருடங்கள் துயில் கொள்வார். அதனால் தான் அவரை காண மக்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுவரை இங்கு கூட்ட நெரிசல் காரணமாகவும், போதுமான வசதிகள் முறையாக ஏற்படுத்தாததன் விளைவாகவும் 4 பேர் பலியாகி உள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் துவங்கி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் வரையில் அனைத்து அரசியல் ஆளுமைகளும் அத்திவரதரை வந்து தரிசனம் செய்துவிட்டனர்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அவர்களின் தயாருமான ராஜாத்தி அம்மாள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
நடந்த நிகழ்வுகளில் மிகவும் ஹைலைட்டானது மதுரையை சேர்ந்த தாதா வரிச்சியூர் செல்வம் வி.வி.ஐ.பி. பாஸில் அத்திவரதர் சிலையின் அருகே அமர்ந்து வேண்டி அதனை வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட அது பெரும் பரபரப்பை கிளப்பியது.
வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான வசதிகளை மக்களுக்கு செய்து தருமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள