Advertisment

வேத மந்திரங்கள் ஒலிக்க சங்கர மடத்துக்குள் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வேத மந்திரங்கள் ஒலிக்க சங்கர மடத்துக்குள்  ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

மூச்சுத் திணறல் காரணமாக மறைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகளின் உடல் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

காலை 10.40 மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் ஜெயேந்திரர் இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

காலை 10.35 ஜெயேந்திரரின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

காலை 10.30  ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்துக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது.  வேத மந்திரிகள் தொடர்ந்து ஒலிக்கப்பட்டு வருகிறது.

காலை 10.20  நாற்காலியில் அமர்ந்தவாறே ஜெயந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

காலை 10.10 ஜெயேந்திரரின் இறுதி அஞ்சலி எல்டி ஸ்கீர்ன் மூலம் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் பக்தர்களுக்கு காட்டப்பட்டது.

காலை 10.00: ஜெயேந்திரருக்கு புது ஆடை சாத்தப்பட்டது. பின்பு, மஞ்சள், குங்குமம் ஆகியவை அவரின் உடலுக்கு பூசப்பட்டது.

காலை 9.44: தமிழக ஆளுநர் பன்வாரிலால் மற்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இறுதி சடங்கில் பங்கேற்பு

காலை 9.40: ஜெயேந்திரர் உடலுக்கு காஞ்சி மடத்தின் மற்ற  சுவாமிகள் அபிஷேகம் செய்தனர்.

82 வயதான ஜெயேந்திரர்  கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நில்லையில், நேற்று(28.2.18) காலை, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் ஜெயேந்திரர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

,

பின்பு அவரின்  உடல் மருத்துவமனையில்  இருந்து காஞ்சி சங்கரமடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மடத்தில் வழக்கமாக ஜெயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு   துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா,  தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இசை அமைப்பாளர் இளையராஜா போன்ற பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

,

 

,

இந்நிலையில், தற்போது   ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.  காஞ்சி சங்கர மடத்தில் உள்ள பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் சமாதியின் அருகே அவரின் உடல் இன்று (1.3.18) நல்லடக்கம் செய்யப்படுகிறது. பெளர்ணமி நன்னளான இன்று அவரின் உடல் பல கட்ட அபிஷேகங்களை கடந்து, நல்லடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சி மடத்தை சுற்றி ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று, அவரின் இறுதி பயணத்தை பார்த்து வருகின்றனர்.

,

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment