kanchipuram athi varadar darshan : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அத்திவரதர், நாளை (ஜூலை 1) முதல் 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனம் தர தயாராகிவிட்டார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவார். இந்த விஷேச விழா நாட்களில் ஒட்டுமொத்த காஞ்சிபுர மக்களும் பக்தி பரவசத்தில் திளைப்பர்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் பக்தர்கள் அணி திரண்டு வருவார்கள். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அத்திவரதர் 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்தாண்டு அத்திவரதர் திருவிழா ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. கடந்த 27 ஆம் தேதி 12 மணிக்கு அத்திவரதரை எடுக்கும் பணி குளத்தில் துவங்கியது. அதிகாலை சுமார் 2.45-க்கு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு வசந்த மண்டபம் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்பு அவருக்கு அங்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதி முதலே பக்தர்களின் தரிசனம் திறக்கப்பட்டுகிறது.
48 நாட்களில் 30நாட்கள் அத்திவரதர் சயன நிலையிலும் 18 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளிக்க இருக்கிறார்.இதையொட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
athi varadar darshan special trains:சிறப்பு ரயில்கள்!
48 நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய விழாவுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் செல்ல உள்ளதால் அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளனர். மேலும், இதுக் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி காலை முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு சந்திப்பு வழியாக காஞ்சிபுரம் சென்றடையும்.