காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் அத்திவரதரை தரிசிக்க தர்ம தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டண தரிசனம் என இரண்டு வழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். பொது தரிசனத்தைவிட கட்டண தரிசனத்தில் அதிகமான பக்தர்கள் இருந்ததால், போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை. இதனையடுத்து பொதுமக்களின் வசதிக்காகவும், தரிசனத்திற்கு அதிக நேரம் காத்துக்கிடப்பதை தவிர்ப்பதற்காகவும், ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சகஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட், இணையதளத்தில் இன்று மதியம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு, ஆன்லைன் புக்கிங் குறித்த தகவல்கள், அந்த இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், அத்தி வரதர் வைபவம், கோலாகலமாக துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று (ஜூலை 1ம் தேதி) அதிகாலை முதல் வரிசையில் நின்று, கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய, அத்தி வரதரை தரிசித்தனர்.அத்தி வரதர் தரிசனத்திற்காக, பக்தர்கள் கோவிலின் கிழக்கு கோபுர வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பொது தரிசனம், 50 ரூபாய் சிறப்பு தரிசனம் என, இரு வழிகளில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர். ப
இலவச தரிசனம், 50 ரூபாய் தரிசனம் என, இரு வழிகளில், பக்தர்கள் நேற்று கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், பொது தரிசனத்தை காட்டிலும், 50 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு, நேற்று அதிக பக்தர்கள் வந்திருந்தனர்; பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர்.இதனால், பக்தர்கள் விரைவாக தரிசிக்க, 50 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்து, அறநிலையத்துறை கமிஷனர், பனீந்திரரெட்டி மற்றும் கலெக்டர், பொன்னையா உத்தரவிட்டுள்ளனர்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் : சகஸ்ர நாமம் அர்ச்சனை டிக்கெட்டுகள், அறநிலையத் துறை, www.hrce.gov.in என்ற இணையதளத்தில், இன்று மதியம், 2:00 மணி முதல் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.