/tamil-ie/media/media_files/uploads/2023/01/Kanchipuram.jpg)
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய வட்டாரங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்தப் பகுதியில் இருளர் பழங்குடி மக்கள் நிரந்தர வீடுகள் இல்லாமல், நீராதார பகுதிகளில் குடிசை வீடுகள் அமைத்து வசிக்கின்றனர்.
இவர்கள், அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு ஊத்துக்காடு ஊராட்சியில் தலா 269 சதுர அடி பரப்பளவில் 76 வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்தது.
இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்த பணிகள் திமுக கட்சியை சேர்ந்த ஒப்பந்ததார் அவளூர் பாபு என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு செய்தார். அப்போது வீடுகள் தரமற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்ததாரர் பாபுவை எச்சரித்தார்.
மேலும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.4.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவருகிறது. இதற்கிடையில், மாவட்ட ஆட்சியரின் செயல் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.