TTF Vasan case in Kanchipuram : காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது டி.டி.எஃப் வாசன் விபத்தில் சிக்கினார்.
இவர், சாலையில் சாகசம் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் எனக் கூறப்படுகிறது. இதளை டிடிஎஃப் வாசன் மறுத்துள்ளார்.
இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை போலீசார் கைதுசெய்தனர்.
அவர் மீது அதிவேகமாக பைக் ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஜாமின் கோரி அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. இதற்கிடையில் டிடிஎஃப் வாசன் ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், டிடிஎஃப் வாசனை வெளியே விட வேண்டும். அவர் 3 நாள்கள் அல்லது ஒரு வாரத்துக்குள் வெளியே வராவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“