19 வயதில் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி… ஜெயேந்திரர் வாழ்க்கை வரலாறு!

காஞ்சி சங்கரமடத்தின் 69 ஆவது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமானர். அவருக்கு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர், ஜெயேந்திரனின் இறப்பு செய்தி காஞ்சி மடத்தில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  19 வயதில் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஜெயேந்திரன் மறக்க முடியாத வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை…. > ஜெயேந்திர சரஸ்வதி 1935ம் ஆண்டு திருவாரூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் பிறந்தார். […]

காஞ்சி சங்கரமடத்தின் 69 ஆவது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமானர். அவருக்கு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர், ஜெயேந்திரனின் இறப்பு செய்தி காஞ்சி மடத்தில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  19 வயதில் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஜெயேந்திரன் மறக்க முடியாத வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை….

> ஜெயேந்திர சரஸ்வதி 1935ம் ஆண்டு திருவாரூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் பிறந்தார்.

> சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி 1954 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி  இளைய பீடாதிபதியாக ஜெயந்திர சரஸ்வதியை அறிமுகம் செய்து வைத்தார்.

>இளையமடாதிபதியாக இருந்த 1980 கால கட்டத்தில் திடீரென காஞ்சி மடத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். பின்பு மூத்த அரசியல் தலைவர்கள் லையிட்டு ஜெயேந்திரரை கண்டுபிடித்து மீட்டு வந்தனர்.

>40 ஆண்டுகள் இளையமடாதிபதியாக இருந்த அவர் 1994ம் ஆண்டில் 69வது காஞ்சி மடத்தின்  பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.

>நவம்பர் 11, 2004 ஆண்டு காஞ்சி கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

>ஜனவரி 10, 2005  சங்கர்ராமன் கொலைவழக்கில் இருந்து, ஜெயேந்திரருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

>நவம்பர் 27 2013, அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.

>மார்ச் 2011ல் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை  ஜெயந்திரர் துவங்கினார்.

>பிப்ரவரி 28, 2018 ஆம் ஆண்டு மூச்சு திணறல் காரணமாக   ஜெயந்திரர் சரஸ்வதி   மரணமடைந்தார்.  கடந்த இரண்டு மாத காலமாக  ஜெயந்திரர்  கடுமையாக மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு சிசிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kanchipuram jayendrar saraswathy biography

Next Story
காஞ்சி மட வளாகத்தில் ஜெயேந்திரர் உடல் அடக்கம் : வியாழக்கிழமை காலையில் இறுதி அஞ்சலிJayendra_Saraswathi 2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com