/indian-express-tamil/media/media_files/R4mHswBpvc0ubqUUZT94.jpg)
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெறுவதையொட்டி, திருச்செந்தூரில் நம்பவர் 6, 7 ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்திபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெறுவதையொட்டி, திருச்செந்தூரில் நம்பவர் 6, 7 ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை (நவம்பர் 7) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், நவம்பர் 8-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக புதன்கிழம (நவம்பர் 6) நாளை மறுநாள் வியாழக்கிழமை (நவம்பர் 7) ஆகிய இரு நாட்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அன்றைய தினங்களில் திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை தவிர்த்து ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தூத்துக்குடியிலிருந்து நெல்லை மார்க்கமாக உவரி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லவும்.
அதேபோன்று, கன்னியாகுமரியில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து நெல்லை மார்க்கமாக உவரி வழியாக வரவேண்டும். எனவே கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.