நமது நாட்டின் பாரம்பரியத்தை இழந்துவிடகூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
அதன்ஒரு பகுதியாக மலைவாழ்மக்களின் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களை அழியாமல் அதன் சத்துகளை குறையாமலும் வரும் தலைமுறையிருக்கு எடுத்து செல்லும் விதமாக மத்திய அறிவியல் பாரம்பரிய ஆராய்ச்சி நிறுவனமும் மார் எப்ரோம் பொறியியல் கல்லூரியும் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணியை அடுத்த ஆதிமலைவாழ் மக்கள் வசிக்கும் ஒருநூறான்வயல் கிராமத்தில் மலைவாழ்மக்களின் பாரம்பரிய உணவு வகைகளின் உணவு திருவிழாவை நடத்தியது.
இவ்விழாவில் மலையோரபகுதிகளில் கிடைக்கும் பத்துக்கும்மேற்பட்ட கிழங்கு வகைகள் பல்வேறு வகையான பாரம்பரிய துவையல்கள் 20க்கும் மேற்பட்ட கீரைவகைகள் மற்றும் 8க்கும் மேற்பட்ட சக்கைவகை உணவுகள் உட்பட பல்வேறு உணவுவகைகள் காட்சிப்படுத்தபட்டன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துட்ப விஞ்ஞானி பிரமோத், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய அரசு விஞ்ஞானி பிரமோத் சங்கர் பேசுகையில், “நம்முடைய பாரம்பரிய உணவான மஞ்சள் வேப்பிலை பாசுமதி அரசி உள்ளிட்ட உணவுவகைகளை மற்ற நாடுகள் உரிமைகொண்டிருந்த நிலையில் இந்த பொருட்களின் காப்புரிமை இந்தியாவிற்கு கிடைத்தது.
இட்லியை போன்ற சிறந்த உணவு உலகத்தில் கிடையாது. நம்முடைய பாரம்பரிய உணவுவகைகளை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து அதை சந்தைபடுத்த வேண்டும்.
அதற்காக முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக தான் இது போன்ற மலைகிராமங்களுக்கு வந்து நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/