Mp Kanimozhi | Lok Sabha Election | Tirunelveli | திருநெல்வேலி மக்களவை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்-க்கு ஆதரவாக வள்ளியூரில் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா ஜெயிக்காது; அப்படி ஒரு வேளை வெற்றிப் பெற்றால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல் ஆகும்” என விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது. ஒருவேளை அப்படி ஒரு விபத்து நேர்ந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல் ஆகும்” என்றார்.
மேலும், “இந்தியாவையும், நமது உரிமைகளையும், மீனவ, விவசாயிகளின் உரிமைகளையும் மீட்டு எடுக்கின்ற தேர்தல் இது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பறக்கும் படை சோதனை
தமிழ்நாட்டு மக்கள் இதனை மனதில் வைத்துக் கொண்டுதான் வாக்களிக்க வேண்டும். நினைவு வைத்துக் கொள்ளுங்கள், இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா ஜெயிக்காது; அப்படி ஒரு வேளை வெற்றிப் பெற்றால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல் ஆகும்” என்றார்.
முன்னதாக தூத்துக்குடியில் வைத்து தி.மு.க. வேட்பாளர் கனிமொழி காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவுடன் தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடங்குகிறது.
ஏப்.19 தேர்தல்
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 7ஆம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்கிறது.
இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
அ.தி.மு.க அணியில் தே.மு.தி.க, புரட்சிப் பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக அணியில் பா.ம.க, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. அண்மையில் பா.ஜ.க உடன் சமத்துவ மக்கள் கட்சியை சரத் குமார் இணைத்துவிட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“