இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்ட படகுகள்; மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? மக்களவையில் கனிமொழி கேள்வி

இலங்கை அரசால் 200-க்கும் மேற்பட்ட படகுகள் தேசியமயமாக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? என்று மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பினார்.

இலங்கை அரசால் 200-க்கும் மேற்பட்ட படகுகள் தேசியமயமாக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? என்று மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
Kanimozhi DMK MP question Lok Sabha on 200 boats nationalized by Sri Lankan govt Tamil News

இலங்கை அரசால் 200-க்கும் மேற்பட்ட படகுகள் தேசியமயமாக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? என்று மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பினார்.

இன்று மக்களவையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி, ‘மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை’ பற்றி நடந்த விவாதத்தில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கிடம் கேள்வி எழுப்பினார். 

Advertisment

அப்போது அவர், "இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட படகுகளை இழந்த மீனவர்களுக்கு, ஒன்றிய மீன்வளத் துறை அல்லது  இந்திய அரசு ஏதேனும் இழப்பீடு வழங்குமா? எங்கள் தமிழ்நாட்டு அரசால் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு ஒன்றிய அரசால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் வழங்கப்படுமா? என்பதை ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கிடம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Lok Sabha Kanimozhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: