மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த நிலையில், தி.மு.க-வில் முதல் வெற்றியை உறுதி செய்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட சிட்டிங் எம்.பி கனிமொழி, தி.மு.க வேட்பாளர்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், 3,92,738 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார். தூத்துக்குடியில் பதிவான மொத்த வாக்குகளில் 55% வாக்குகளைக் கனிமொழி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார். இவர் 15.12% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
த.மா.கா வேட்பாளர் விஜயசீலன் எஸ்.டி.ஆர் 1,22,380 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார். தா.ம.க 12.51% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவெனா ரூத் ஜேன் 1,20,300 வகுகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 12.29% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“