/indian-express-tamil/media/media_files/4dTJc2xtB2CGdjdERXzz.png)
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மரணத்துக்கு கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் கொரோனா பெருந்தொற்று காரணமாக இன்று (டிச.28) காலமானார்.
“நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவரின் மறைவுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர், “தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 28, 2023
எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு… pic.twitter.com/elf7gBFTD3
எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.