scorecardresearch

சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு கனிமொழி?

தி.மு.க-வில் முக்கிய தலைவராக சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிக்கு கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subbulakshmi Jagatheesan, DMK, DMK Deputy General Secretary, Kanimozhi, DMK MP Kanimozhi

தி.மு.க-வில் முக்கிய தலைவராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதற்காக, அவர் வகித்து வந்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிக்கு கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க-வில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு அடுத்து துணைப் பொதுச்செயலாளர் பதவி முக்கியப் பதவியாகப் பார்க்கப்படுகிறது. தி.மு.க-வில் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அதனால், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் விலகல் அறிக்கையை வெளியிட்டார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க-வில் வகித்து வந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அவருடைய பதவி காலியாக இருப்பதால், அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தி.மு.க-வில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிகு கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kanimozhi may appoints to subbulakshmi jagatheesan resigns dmk deputy general secretary post

Best of Express