தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் – கனிமொழி எம்.பி கண்டனம்
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு கனிமொழி எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு கனிமொழி எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்
Kanimozhi MP condemns RBI officers for Tamil thai vazhthu issue: சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாதது சர்ச்சையாகியுள்ளது. இதனையடுத்து இந்த அதிகாரிகள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதன்பிறகு நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.
Advertisment
Advertisements
இதுதொடர்பாக நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சிலர் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், அங்கு இருந்தவர்கள் சிலர்.. நீங்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டதற்கு.. நாங்கள் ஏன் நிற்க வேண்டும்.. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நிற்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் நாங்கள் நிற்கவில்லை என்று கூறி கேள்வி எழுப்பியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு அரசின் உத்தரவை பற்றி அங்கு இருந்தவர்கள் கூற முயலும்போது, அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அங்கிருந்து ஆர்பிஐ ஊழியர்கள் வெளியேறி உள்ளனர்.
இப்பிரச்சனை தீவிரமடைந்ததையடுத்து ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் தலையிட்டு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அரசாணையை குறிப்பிட்டு கனிமொழி எம்.பி, தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என பதிவிட்டுள்ளார்.