Advertisment

கனிமொழி கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதி: திடீர் உடல் நலக் குறைவு

தி.மு.க எம்.பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
Mar 12, 2023 15:07 IST
New Update
Kanimozhi MP husband Aravindan Hospitalized in Singapore Tamil News

Kanimozhi MP husband Aravindan admitted in a hospital in Singapore due to lung infection Tamil News

Kanimozhi MP husband Aravindan Hospitalized Tamil News: தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி) இருப்பவர் கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

Advertisment
publive-image

அரவிந்தனின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில், அதாவது ஒரு வார காலத்துக்குள் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கேட்டு வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Tamilnadu #Dmk #Cm Mk Stalin #Dmk Stalin #Kanimozhi #Mp Kanimozhi #Singapore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment