குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது செயல்படத் தொடங்கும்? கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பதிலில், கிழக்கு கடற்கரை சாலையை மாற்றுவதற்கான நிலம் தவிர, தளம் மேம்பாடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறினார். மேலும், தொழில்நுட்ப வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் தளத்தில் நடைபெற்று வருகின்றன.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பதிலில், கிழக்கு கடற்கரை சாலையை மாற்றுவதற்கான நிலம் தவிர, தளம் மேம்பாடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறினார். மேலும், தொழில்நுட்ப வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் தளத்தில் நடைபெற்று வருகின்றன.

author-image
WebDesk
New Update
Kanimozhi Jitendra Singh

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், புதன்கிழமை, ஜூலை 30, 2025-ல் புது டெல்லியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசுகிறார். Photograph: (PTI)

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் 2026 - 2027 நிதி ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார். இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தற்போது தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் கட்டப்பட்டு வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

தி.மு.க. எம்.பி கனிமொழி கருணாநிதி, முன்மொழியப்பட்ட குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் நிலை குறித்து கேட்ட கேள்விக்கு ம்த்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனது பதிலில், கிழக்கு கடற்கரை சாலையை மாற்றுவதற்கான நிலம் தவிர, தளம் மேம்பாடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறினார். மேலும், தொழில்நுட்ப வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் தளத்தில் நடைபெற்று வருகின்றன.

தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொள்ளும் அனைத்து விண்வெளி ஏவுதல்களும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisment
Advertisements

2024 பிப்ரவரியில், பிரதமர் நரேந்திர மோடி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் புவியியல் ரீதியாக ஒரு முக்கிய நன்மையைப் பெற்றுள்ளது. ரூ. 985.96 கோடி நிதி ஒதுக்கீட்டில், இந்த ராக்கெட் ஏவுதளம் எதிர்காலத்தில் வணிக ரீதியிலான, தேவைக்கேற்ப மற்றும் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும்.

“செயல்பாட்டிற்குப் பிறகு, சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி) மற்றும் அரசு அல்லாத நிறுவனங்களின் அதற்கு சமமான வாகனங்களை குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது” என்று விண்வெளித் துறை அமைச்சர் கூறினார்.

எஸ்.எஸ்.எல்.வி திட்டங்கள், குறைந்த செலவில் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மிகவும் பொருத்தமானவை. மேலும், செயற்கைக்கோள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். அவை பொதுவாக 10 முதல் 500 கிலோ எடை கொண்டவை என்பதால், குறைந்த தூரத்தில் மற்றும் குறைந்த எரிபொருளில் திட்டத்தை நிறைவு செய்யும் திறன் அவசியம். குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் செயல்படத் தொடங்கியதும், இந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஏனெனில் இது ஒரு நேரடி தெற்கு நோக்கிய மற்றும் சிறிய ஏவுதல் பாதையை வழங்கும்.

தளத்தில் தரைப்பணிகள் தொடங்கியதில் இருந்து இந்த ஜூலை மாதம் வரை, திட்ட மேம்பாட்டிற்காக ரூ. 389.58 கோடி செலவிடப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ராக்கெட் ஏவுதளம், இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி) போன்ற வாகனங்களின் பேலோட் திறனை மேம்படுத்தும். இது செயற்கைக்கோள்களை துருவ சுற்றுப்பாதைகளில் செலுத்தும் போது இது சாத்தியமாகும்.

Kanimozhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: