வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த கலவரத்தில் பலர் பாதிக்கப்பட்டனர்; பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர். பெண்கள் துன்புறுத்தப்படும் காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் 2 நாள்கள் பயணமாக மணிப்பூர் சென்றனர்.
அவர்கள் அங்கு நிவாரண முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்கள். பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களை தனியாக பெண் எம்.பி.க்கள் மட்டும் சந்தித்துப் பேசினார்கள்.
தொடர்ந்து, அம்மாநில ஆளுனரை சந்தித்து அறிக்கை சமர்பித்தார்கள். இந்த நிலையில் டெல்லியில் இன்று கனிமொழி பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மணிப்பூரில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மக்கள் நிவாரண முகா்மகளில் கஷ்டப்படுகின்றனர்.
சரியாக உணவு கிடைக்கவில்லை. பெண்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே குற்றத்துக்கு துணை போய் உள்ளனர் எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினார்கள்.
ஆகவே மணிப்பூரில் அமைதி திரும்விட்டது என்பது பொய். மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“