Advertisment

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? கனிமொழி பதில் இதுதான்!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, கனிமொழி பதிலளித்தார். திமுக எம்எல்ஏ மகன் விவகாரக் குறித்து பேசுகையில்,

author-image
WebDesk
New Update
sasa

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் கனிமொழி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

mp-kanimozhi | nagercoil | திமுக துணை பொதுச்செயலாளரும்,  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி,  நாகர்கோவிலில் புதன்கிழமை ( ஜனவரி 24, 2024)  செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், " சென்னையில் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறது.

Advertisment

இதேபோன்று இளம் பெண்ணை நடத்திய நபர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட முடியாது; எப்படியும் திமுக அரசு குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடும். இதைத் தெரிந்து தான் அதிமுகவினர் போராட்டம் அறிவித்துள்ளார்கள்.
அதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்; அப்படி கைது செய்த பிறகு நாங்கள் போராட்டம் அறிவித்ததால் தான் இந்த கைது நடந்துள்ளது என கூறுவார்கள்" என்றார்.

 தூத்துக்குடியில் மீண்டும் போட்டி? 

தொடர்ந்து தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், " மக்களவைத் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன; பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன். தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் (மு.க ஸ்டாலின்)  முடிவெடுப்பார்" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mp Kanimozhi Nagercoil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment