திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமொழி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “திமுக, ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்கள் கருத்தை கேட்டு தேர்தல் அறிவிப்பை தயாரிப்பதை கருணாநிதி வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களவை தேர்தலில் அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை ஏற்படுத்தி உள்ளார்.
அதன்படி இன்று (பிப்.6) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு குழுக்கள், அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்தோம்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையில் எதிர்க்கட்சிகளை பற்றி குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். பிரதமரின் 10 ஆண்டு சாதனைகளை சொல்ல ஒன்றுமில்லாத தால், 60 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியவர்களை குறை சொல்கிறார்.
சண்டிகர் மாநிலத்தில் நடந்த மேயர் தேர்தலில் பாஜக செய்த ஜனநாயக கொடுமையை, சில நேரங்களில் நியாயத்தை நிதிமன்றங்கள் சொல்லுகிறது.
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, ஒரே உணவு, ஒரே கோயில் என சொல்லும் பாஜக, ஒரே நாளில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த முடியாது என்பதை அறிந்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்துக்கு பின்னால் மாநிலங்களின் அடிப்படை உரிமைகள் எல்லாம் சிதைத்து விடுவதே நோக்கமாக இருக்கும்.
மேலும், மத அரசியல், தாழ்வு மனப்பான்மை, கல்வி, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றை எல்லாம் உருவாக்குவதே இவர்களின் நோக்கம்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“