திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “தமிழக ஆளுநர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தொடர்ந்து அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இது தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து ஒன்றிய அரசிடம் தெரிவித்தாகிவிட்டது. அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பது தான் வருத்தமானது” என்றார்.
இதற்கிடையில் கனிமொழியின் வருகை்கு பின்னால் உள்கட்சி அரசியல் ஒன்று இருப்பதாக கூறுகின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜூம், சுரேஷ் ராஜனும் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டனர்.
தற்போது மனோ தங்கராஜும், சுரேஷ் ராஜனும் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால், மேயர் மேகஷ் இடையே பிணக்கு காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தப் பஞ்சாயத்தை கனிமொழி தீர்த்து வைத்தார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மனோ தங்கராஜ் தீவிர கனிமொழி ஆதரவார் ஆவார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“