கனிமொழி படம் பொறித்த சேலைகள் ரெடி... 'பர்த் டே' பலம் காட்டும் ஆதரவாளர்கள்!
தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் எப்போதுமே தி.மு.க-வில் ரொம்ப ஸ்பெஷல். அந்த வகையில் கனிமொழி பிறந்தநாள் விழாவையும் அமர்க்களப் படுத்த அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள்.
தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் எப்போதுமே தி.மு.க-வில் ரொம்ப ஸ்பெஷல். அந்த வகையில் கனிமொழி பிறந்தநாள் விழாவையும் அமர்க்களப் படுத்த அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள்.
Advertisment
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5-ல் கனிமொழி பிறந்தநாள் விழா முக்கியத்துவம் பெறுவது வழக்கம்தான். ஆனால் இந்த ஆண்டு 2 விஷயங்களில் இந்த விழா கூடுதல் உன்னிப்புடன் கவனிக்கப்படுகிறது. ஒன்று, கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்துக்கு கனிமொழி உயர்ந்த பிறகு நடைபெறும் அவரது முதல் பிறந்த நாள் விழா இது. மற்றொன்று, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றிருக்கும் நிலையில், கனிமொழி ஆதரவாளர்களும் தங்கள் துடிப்பை காட்டும் விழாவாக இது உணரப்படுகிறது.
வழக்கம்போல கனிமொழி பிறந்தநாள் விழாவை ஒட்டி வாழ்த்து விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் என இந்த ஆண்டும் ஜரூராக பலரும் தயாராகி வருகிறார்கள். கூடுதலாக இந்த ஆண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முயற்சிகளிலும் கனிமொழி ஆதவாளர்கள் இறங்கி இருக்கிறார்கள்.
கனிமொழி அண்மையில் துறந்த மகளிர் அணி மாநில செயலாளர் பதவியை கன்னியாகுமரி முன்னாள் எம்.பி- யும், கனிமொழி ஆதரவாளருமான ஹெலன் டேவிட்சன் வசம் ஒப்படைத்து இருக்கிறார்கள். எனவே பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மகளிர் அணியினர் முக்கிய பங்காற்ற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதன் முன்னோட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அணி பிரமுகர் அம்மு ஆன்றோ ஏற்பாட்டில் கலைஞர், ஸ்டாலின், கனிமொழி படம் பொறித்த சேலைகள் ஆயிரக்கணக்கில் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த சேலைகளை நலத்திட்ட உதவிகளாக கனிமொழி பிறந்தநாள் அன்று வழங்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த சேலையை மும்பை மாடல் ஒருவர் அணிந்தபடி ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் வீடியோ ரீல்ஸ் ஒன்றை தயார் செய்து, அதனை சமூக வலைதளங்களில் இப்போதே வைரல் ஆக்கி வருகிறார்கள்.
அந்த வீடியோ ரீல்ஸ் பின்னணியில், 'கனிமொழியே நீ வாழ்க' எனத் தொடங்கும் பாடல் வரிகளும் ஒலிக்கின்றன. பலரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆகவும் இந்த பாடல் அலங்கரிக்க ஆரம்பித்து விட்டது.
கனிமொழி தனது பிறந்தநாள் விழா தொடர்பாக வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடுவது இல்லை. நிகழ்ச்சிகளை நடத்துவதும் இல்லை. ஆனாலும் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என வடிவமைக்கப்பட்டு வரும் தி.மு.க-வின் பரிணாம வளர்ச்சியில் கனிமொழியை முற்றிலுமாக புறக்கணித்து விட முடியாது என்பதை இது போன்ற நிகழ்வுகளால் அவரது ஆதரவாளர்கள் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news