திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டார்.
இதில் அந்த மாணவரின் தங்கை மீதும் வெட்டு விழுந்தது. இருவரும் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதை நேரில் பார்த்த மாணவன்-மாணவியின் தாத்தா நிகழ்விடத்திலே மரணம் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கனிமொழி
இந்தச் சம்பவத்துக்கு திமுக மக்களவை எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெற்றோர், ஆசிரியர் என நாம் அனைவரும் பொறுப்பேற்று, சீர்திருத்த வேண்டிய பிரச்னை இது. சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை. சின்னதுரை மற்றும் அவரது சகோதரி விரைந்து குணமடைந்து நலம் பெற விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“