மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று அதிமுக தலைமையாக இருந்திருந்தால், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) ஆதரவளித்திருக்க மாட்டார் என்று திமுக எம்.பி கனிமொழி சனிக்கிழமை கூறினார். கோழிக்கோட்டில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் (கே.எல்.எஃப்) கலந்துரையாடலின்போது பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
ஜெயலலிதாவின் குறித்த கேள்விக்கு பதிலளித்த திமுக எம்.பி கனிமொழி, “அவர் அவருடைய கட்சியில் கூட ஒரு பாரம்பரியத்தையும் விடவில்லை. இது சோகமான பகுதியாகும். அவர் எதற்காக நின்றாரோ அவருடைய கட்சி அதை தோற்கடிக்கிறது. உண்மையைச் சொல்வதானால், ஜெயலலிதா இன்ரு கட்சி தலைமையில் இருந்திருந்தால், அவர் சிஏஏ-வை ஆதரித்திருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, “அவர் அவள் ஒரு கொள்கை மரபை விட்டுச்செல்லவில்லை. அவர் தனது கட்சியில் ஒரு வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார். ஜெயலலிதாவுடன் எங்களுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவரது நிர்வாக முறைக்கு நாங்கள் உடன்படவில்லை. ஆனால், அவர் குறைந்தபட்சம் மாநில உரிமைகளை நம்பினார்.” என்று கூறினார்.
அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் மறைந்த முதல்வர் மீது தான் எப்போதும் மரியாதை வைத்திருப்பதாக தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி கூறினார். ஏனெனில், நடைமுறை அரசியல் பின்னணி ஆதரவு இல்லாமல் ஜெயலலிதா புகழ் பெற்றார் என்று கனிமொழி கூறினார்.
மேலும், “துரதிருஷ்டவசமாக, ஜெயலலிதாவுடன் தொடர்பு கொள்ள எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அவரை விரும்பியிருப்பேன்”என்று கனிமொழி கூறினார்.
மக்களிடையே பாகுபாடு காட்டும்விதமாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை அளிக்கும் சட்டத்தை இயற்றியதற்காக கனிமொழி பாஜக ஆளும் மத்திய அரசை கடுமையாக தாக்கினார். நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய, அரசியல் மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அவர்கள் எழுந்து ஒன்றுபட்ட விதம் குறித்து தி.மு.க தலைவர் கேரள மக்களைப் பாராட்டினார்.
மேலும், “இதை வெள்ளையனே வெளியேறு” இயக்கமாக பார்க்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். சிஏஏ-க்கு எதிராக தமிழகம் வீதிகளில் இறங்கி போராடினாலும், பல மாநிலங்கள் முடிவு செய்துள்ளபடி நாங்கள் அமைதியாக இருக்கப் போகிறோம் என்றால், இந்த வகையான பாகுபாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ முடியாது என்று நான் நினைக்கிறேன். கேரளாவுக்கு வணக்கம், அங்கு அரசியல் எல்லையில் உள்ள அனைவரும் அதற்கு எதிராக வீதிகளுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இது நடப்பதை நான் காண விரும்புகிறேன்” என்று கனிமொழி கூறினார்.