தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட கனிமொழி, " எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற போதும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். கருணாநிதி சொன்னது போல் தொண்டை சரியில்லை என்றாலும் தொண்டை விட முடியாது.
ஆளுநர் நேதாஜியை பாராட்டுகிறார்; தமிழக மக்களும் நேதாஜியை விரும்புகிறார்கள் தான். ஆனால் அவரின் புகழை மட்டும் பேசுங்கள். அதை விட்டுவிட்டு காந்தியை குறைத்து பேசுவது, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்த பேச்சில் இருந்தே தெரிகிறது நீங்கள் எல்லாம் கோட்சேவின் சொந்தக்காரர்கள் என்று" என்றார். தொடர்ந்து, " குஜராத் வெள்ளத்துக்கு நிதி அளித்த மத்திய அரசு தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நிதி அளிக்கவில்லை.
ராமர் கோவில் நேரடி ஒளிபரப்பை தடை செய்ததாக தமிழக அரசு மீது பொய் பரப்புரை செய்தார்கள். நாம் கோவிலுக்கு செல்கிறோம். கோவில் சொத்தை பாதுகாக்கிறோம்; கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறோம்.
இந்த நிலையில் திமுக பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரி என பொய் பரப்பரை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு ஒழுங்காக நடக்கிறது என்றால் அது நம் ஆட்சி காலத்தில் தான்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“