நீங்கள் இந்தியரா? விமான நிலையத்தில் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிகாரி

விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழியிடம்  ஒரு சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என்று கேட்டார் என்ற ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kanimozhi mp, kanimozhi dmk mp,
Latest Tamil News

விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழியிடம்  ஒரு சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என்று கேட்டதாக தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கைக்கு அண்மையில்தான் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை என்பது மாநில ஆங்கிலம் தாய்மொழி மற்றும் மூன்றாவது மொழியை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து மாநிலக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் தெரிவித்துள்ள ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்.பி. கனிமொழியிடம் விமான நிலையத்தில், தனக்கு இந்தி தெரியாது என்பதால் சி.ஐ.எஸ்.எஃப் படை அத்காரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமார் கேட்டதற்கு அவர் நீங்கள் ஒரு இந்தியனா என்று கேட்டார். அதனால், இந்தி தெரிந்திருந்திருப்பது என்பது இந்தியன் எனபதற்கு சமமா என்றுறு கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று விமான நிலையத்தில் என்னை ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கேட்டபோது,அவர் நீங்கள் ஒரு இந்தியனா என்று கேட்டார். அதனால், இந்தியானாக இருப்பது என்பது இந்தி தெரிந்துகொள்வதற்கு சமமானதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.” என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எ.ஃப் அதிகாரி கனிமொழியிடம் நீங்கள் ஒரு இந்தியனா என்று கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kanimozhi tweet about in airport cisf officer asked her are you indian because she asked to speak in tamil or english not know hindi

Next Story
News Highlights : சோனியா காந்தி கட்சியின் இடைகாலத் தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் அறிவிப்புSonia Gandhi Interim President
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express