தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டத்தில் உள்ள வட வல்லநாடு ஊராட்சியில், 363 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும் வகையில் நடைபெற்றுவரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்தார்.
/indian-express-tamil/media/post_attachments/8b929031-dd8.jpg)
/indian-express-tamil/media/post_attachments/69a3d22c-605.jpg)
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த 363 கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கனிமொழி கருணாநிதி, அன்று (23/05/2023) அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/f85e9489-8fe.jpg)
/indian-express-tamil/media/post_attachments/9ec16925-265.jpg)
இந்த பணிகள் குறித்து கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/167619e5-34d.jpg)
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான இந்த குடிநீர் திட்டத்தின் வழியாக கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்களுக்குத் தண்ணீர் தரக்கூடிய வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்