/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-27T080953.760.jpg)
kanna laddu thinna aasaiya, actor sethuraman, death, santhanam, condolence, dermatologist, kollywood
தமிழ் திரைப்பட நடிகரும், டாக்டருமான சேதுராமன் மார்ச் 26ம் தேதி இரவு மாரடைப்பால் காலமானார்.
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் தோல் சிகிச்சை டாக்டருமான சேதுராமன், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர்,மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார். சினிமாவிலும் கவனம் செலுத்திய இவர், வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக, அவர் 26ம் தேதி இரவு காலமானார். அவரின் இறப்புச்செய்தி, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேதுராமன் இறந்ததை நடிகர் சதீஷ், தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், 'நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என பதிவிட்டுள்ளார்.
Sad news. Actor and Doctor Sedhuraman passed away few hours ago due to cardiac arrest. My condolences to his family. RIP pic.twitter.com/SIlkfQ1qm2
— Sathish (@actorsathish) March 26, 2020
இவரது மறைவுக்கு, நடிகர் சந்தானம் உள்ளிட்ட திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Totally shocked and depressed on the demise of my dear friend Dr.Sethu.. May his soul rest in peace???? pic.twitter.com/TuRnUxLleA
— Santhanam (@iamsanthanam) March 26, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.