Advertisment

கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பலி: குமரியில் நிகழ்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் கடலில் இறங்கிக் குளித்த திருச்சி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

author-image
WebDesk
New Update
Kanniyakumari 5 Trichy medical college students drowned to death  in the sea Tamil News

திருச்சி மருத்துவக்கல்லூரியில் பயின்ற பயிற்சி மாணவர்கள் 5 பேர் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 

Advertisment

க.சண்முகவடிவேல்

kanniyakumari: திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவரின் சகோதரர் திருமணத்திற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை நாகர்கோயில் வந்துள்ளனர். 

திருமணத்தை முடித்துவிட்டு இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்து சூரிய உதயத்தை கண்டு களித்தனர். பிறகு, காலை 10 மணி அளவில் கணபதிபுரம் அருகே லெமூர் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது 9 பேர் கடலில் இறங்கி குளித்த நிலையில் அவர்களை ராட்ச அலை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. 

பின்னர், அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடலில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இதில், 3 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். மேலும், கடலில் இருந்து மீட்கப்படவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் தஞ்சையைச் சேர்ந்த சாருகவி (24), நெய்வேலியைச் சேர்ந்த காயத்ரி (25), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), திண்டுக்கலைச் சேர்ந்த ப்ரவீன் (23),  குமரியைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடல் அலையில் சிக்கி இறந்த ஐந்து பேர்

இது தொடர்பாக ராஜகமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில், இன்று திருச்சி மருத்துவக்கல்லூரியில் பயின்ற பயிற்சி மாணவர்கள் 5 பேர் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

கன்னியாக்குமரி மாவட்டம் - லெமூர் கடற்கரை அலையில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விபரம்

பிரீத்தி ப்ரியங்கா -23/F, D/o ராஜவேல், தாய் காலனி, பெரிய குளம்,தேனி.

நேசி -24/F, D/o செல்வகுமார், கரூர்.

சரண்யா -24/F, D/o சிரினிவாசன், மதுரை.

இறந்தவர்கள் விபரம்

பிரவீன் ஷாம் -24/M , S/o முருகேசன், ஒட்டான்சத்திரம்.

காயத்ரி -25/F, D/o பாபு, நெய்வேலி.

சாருகவி -23/F, D/o துரை செல்வன், தஞ்சாவூர்.

வெங்கடேஷ் -24/M, ந்திரபிரதேஷ்.

சர்வ தர்ஷித் -23/M S/o பசுபதி,

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

kanniyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment