கடந்த 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்ற போது அவரின் ஒன்றரை வயது குழந்தையை கடத்தி சென்றது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில் உடனடியாக கோவை ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/29834b39-287.jpg)
பின்னர் டி.எஸ்.பி ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி அடங்கிய ஆலாந்துறை போலீசார் பூண்டி சாலை முட்டதுவையல் குளத்தேரி பகுதியில் இருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (43), திலகவதி (35) தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
6/indian-express-tamil/media/post_attachments/b4bde25f-686.jpg)
விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியாதாக ஒப்புகொண்ட நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறி உள்ளனர். பின்னர் ஆலந்துறை போலீசார் சேலம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தை இருக்கும் இடத்தை தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் திருச்செந்தூர் காவல்துறையினரும் சேலம் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே குழந்தை கடத்தல் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/041c63b2-18f.jpg)
இதனிடையே குற்றவாளியான திலகவதி கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் சேலத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தாரா? அல்லது காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்தாரா? என்பது குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது திலகவதியின் உடலை கோவை போளுவம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“