த.இ.தாகூர்., குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாரதபள்ளி குன்னத்துவிளை சேர்ந்தவர் ஜாக்சன்(39). இவரது மனைவி உஷாகுமாரி காங்கிரஸ் கட்சியில் திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருகிறார். மேலும் திருவட்டார் பேரூராட்சியில் வார்டு கவுன்சிலராக உள்ளார் இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் 10ஆம் வகுப்பும் இளைய மகள் 5ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
ஜாக்சனுக்கும் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த விலாங்கன் என்ற ராஜகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாக கூறபடுகிறது. இதில் ராஜகுமார் மீது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வழக்குகள் உள்ளது. இதனிடையெ நேற்று இரவு தனது வீட்டின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் ஜாக்சன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜகுமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜாக்சனை சராமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்ட அப்பகுதியினர் சிகிச்சைக்காக, நெய்யாற்றங்கரையிலுள்ள தனியார் மருத்துவமனைமில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காலையில் சிகிக்சை பலனின்றி ஜாக்சன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூராட்சி கவுன்சிலரின் கணவரை கொலைசெய்துவிட்டு தப்பி ஓடிய ராஜகுமாரை பிடிக்க காவல்துறையினர் தேடிவருகின்றனர். காங்கிரஸ் கட்சியைசேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் கொலைசெய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“