Advertisment

Kanyakumari Lok Sabha Election Results 2024: குமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அபார வெற்றி

Kanyakumari Election Result 2024- அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டமாக இருக்கும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், கேரளாவைப் போன்றே தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay vasanth won congress

Kanyakumari Election Results 2024

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kanyakumari Election Results 2024 Live Updates: கன்னியாகுமரி, தமிழகத்தின் கடைக்கோடி நாடாளுமன்ற தொகுதி இது. தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் இது 39வது தொகுதி ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் பிரபல சுற்றுலா தலமாக இது திகழ்கிறது.

Advertisment

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 15826 வாக்குகளும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 3128 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

முன்பு நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த இது, 2009ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கன்னியாகுமரி மக்களவை தொகுதி என பெயர் மாற்றம் பெற்றது.

நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியிருந்தன.

ஆனால், கன்னியாகுமரி தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றபோது, திருவட்டார் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டது.

1952-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாகர்கோவில் மக்களவை தொகுதியில் 15 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

தேசியக் கட்சிகளின் ஆதிக்கம்

அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டமாக இருக்கும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், கேரளாவைப் போன்றே தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. இந்த தொகுதி காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாக பல தேர்தல்களாக இருந்து வருகிறது.

காங்கிரஸ் கோட்டை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்ற பெருமை பெற்றது.

நாகர்கோவில் தொகுதியாக இருந்த சமயத்தில் 'குமரி தந்தை' என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி, தானுலிங்க நாடார், காமராஜர், குமரி அனந்தன் போன்றோர் இத்தொகுதியின் எம்.பிக்களாக இருந்துள்ளனர்.

காமராஜர் தொடர்ந்து இரண்டு முறை இத்தொகுதியின் எம்.பி ஆக இருந்துள்ளார்.  

சுவாரஸ்யமாக, 1980 முதல் 1998 வரை நடந்த ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்ற டென்னிஸ், அதிக முறை கன்னியாகுமரி தொகுதியைக் கைப்பற்றியவர் என்ற சிறப்பைப் பெற்றவர். இதில் நான்கு முறை காங்கிரஸ் சார்பிலும், இரண்டு முறை தமாகா சார்பிலும் வெற்றி பெற்றார்.

2009க்கு பிறகு 4 முறை கன்னியாகுமரி தொகுதியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் ஹெலன் டேவிட்சன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.வசந்தகுமார் மற்றும் விஜய் வசந்த் போன்றோர் எம்.பிக்களாக இருந்துள்ளனர்.

2019 மக்களவை தேர்தல்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிட்ட ஹெச். வசந்த குமார் 6,20,594 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதே நேரம் பாரதிய ஜனதா கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் 3,62,976 வாக்குகளே பெற்றார்.

பின்னர் கொரோனா தொற்றால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வசந்த குமார் காலமானார். அதன்பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது.

இதில் வசந்த குமார் மகன் விஜய் வசந்த், திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த இடைத் தேர்தலில் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளையும், அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளையும் பெற்றனர். இதனால், விஜய் வசந்த் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாக்காளர் விவரம்

கன்னியாகுமரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,47,378

ஆண் வாக்காளர்கள்: 7,72,623

பெண் வாக்காளர்கள்: 7,74,619

மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 136

2024-ம் ஆண்டு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்

தி.மு.- விஜய் வசந்த் (காங்கிரஸ்)

.தி,மு..- பசிலியன் நசரேத்

பா...- பொன். ராதாகிருஷ்ணன்

நா...- மரிய ஜெனிபர்

குறிப்பாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் 10-வது முறையாக களமிறங்கினார்.

இவர்களுடன் 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

2024 தேர்தல் முடிவுகள்

விஜய் வசந்த் - 546248

பொன். ராதாகிருஷ்ணன்-358961

மரிய ஜெனிபர்- 50215

பசிலியன் நசரேத்- 39654

இதன்மூலம் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் விஜய் வசந்த் 187287 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment