Advertisment

குமரி மாவட்ட மேற்கு கடல் பரப்பில் புதிதாக வண்ணம் கலந்த காட்சி! குழப்பத்தில் மீனவர்கள்

குமரியில் கடந்த இரண்டு நாட்களாக சில ஊர்களில் கடல் தண்ணீர் இது வரை இல்லாத கடும் சிகப்பு, தவுட்டு நிறங்களில் இருக்கிறது. புதிதாக வண்ணமான கடல் பரப்பில் அலைகள் ஓங்கி, உயர்ந்து வரும் போது இந்த நிறம் மாற்றம் துல்லியமாக தெரிகிறது

author-image
WebDesk
New Update
kumari

வண்ணம் மாறி காட்சி அளிக்கும் குமரிக் கடல்

கன்னியாகுமரி இயற்கை அமைப்பில் மூன்று கடல்கள் சங்கமம் ஆகும் இடம். கன்னியாகுமரி திருவேணி கடல் பகுதி என்பது பக்தர்கள் புனித நீராடும் இடம். இந்த பகுதி மூன்று கடல்களின் அலைக் கூட்டமும் சங்கமம் ஆகும் பகுதி என்பதுடன், கடல் பரப்பில் மூன்று திசைகளில் இருந்து வரும் அலையை தனியாக அடையாளம் காணவும் முடியும்.

Advertisment

கூடன்குளம் அனல் மின் நிலையம் வந்த சில காலங்களிலே அந்த கடல் பரப்பில் தண்ணீரின் வண்ணம் மாறுபடும் சூழல் ஏற்பட்டபோதே, அந்த பகுதி மீனவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, மீன்கள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: சக்கர பலகையில் வந்த மாற்றுத்திறனாளி பெண் : மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கலெக்டர்

அந்த சமயத்தில் மீனவர்கள் தெரிவித்த கருத்து கடல் நீரை இராட்சத கருவிகள் மூலம் அணு ஆலைக்கு உள்ளே எடுத்து சென்று கடல் நீரின் உப்புத்தன்மையை அகற்றி நல்ல தண்ணிராக மாற்றிய பின் எஞ்சிய உப்புத்தன்மையை வடிகட்டிய தண்ணீரை மீண்டும் கடலுக்குள் திருப்பி விடுவதாலே அந்த பகுதியில் கடலில் தண்ணீர் வேறு வண்ணம் குறிப்பாக கடும் சிகப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கிறது. இந்த கடல் நீரீன் வண்ண மாற்றம் உவரி கடல் பகுதி வரை காண முடிந்தது. கடல்நீர் வண்ண மாற்றம் சில நாட்கள் நீடிக்கும், சில நாட்களில் இயல்பு நிலைக்கு மாறி விடும் என்பதால், காலப்போக்கில் அது குறித்த கேள்விகள் எழுப்புவதையும் மீனவர்கள் விட்டு விட்டனர்.

இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களாக மணவாளக்குறிச்சி, சின்னவிளை, பெரிய விளை, மண்டைக்காடு, புதூர், கொட்டில்பாடு ஆகிய கன்னியாகுமரியின் மேற்கு கடல் பகுதியில். கடல் பரப்பில் தண்ணீர் செம்மண் நிறமாகவும், சில பகுதிகளில் கடுமையான இருண்ட சிகப்பு நிறத்தில் காணப்படும் நிலைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குமரியில் சாய கம்பெனிகள் எதுவும் இல்லாத நிலையில், கடல் நீர் வண்ணம் மாறுபடுவது எப்படி என்ற கேள்வியுடன், கடலோர மீனவ பகுதியில் உள்ள சில முதியோர்களிடம் கடல் நீர் மாற்றத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என கேட்டபோது, கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களினால், கடலின் உள்ளே ஏற்படும் நீரோட்டத்தால்  கடல் உள் வாங்கும். அப்போது அது வரை கடலின் உள்ளே மறைந்திருந்த சில பாறை பகுதிகள் வெளியே தெரியும். கடல் உள் வாங்கும் நிலை சில நாட்கள் கூட நீடிக்கும், பின்னர் சகஜமான நிலைக்கு வந்து விடும். நீண்ட நீளக் கடல் பரப்பில் இயல்பாகவே வேறு, வேறு வண்ணங்கள் இருப்பது இயல்பு. வானின் வண்ண மாற்றங்கள் கடல் நீரில் பிரதிபலிக்கும். குறிப்பாக சில பகுதிகள் நீல வண்ணத்தில் தெளிவாக தெரியும் சமகாலத்திலே, வேறு பகுதியில் கார்வண்ணமாக தெரியும், இது தான் இயல்பு நிலை.

கடந்த இரண்டு நாட்களாக சில ஊர்களில் கடல் தண்ணீர் இது வரை நாங்கள் பார்க்காத கடும் சிகப்பு, தவுட்டு நிறங்களில் இருக்கிறது. புதிதாக வண்ணமான கடல் பரப்பில் அலைகள் ஓங்கி, உயர்ந்து வரும் போது இந்த நிறம் மாற்றம் துல்லியமாக தெரிகிறது.

அண்மையில் சில நாட்கள் பெய்த மழையில் தாம்பரபரணி ஆற்றின் தண்ணீர் பரப்பில் சில இடங்களில் இத்தகைய நிற மாற்றம் இருந்தை பலரும் பார்த்தோம். தாம்பரபரணி ஆறு, குமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டணம் பகுதியில் கடலில் கலக்கிறது. தாம்பரபரணி ஆற்று தண்ணீரில் கலந்து வந்த வண்ணம் கடல் தண்ணீரில் கலந்துதால் இந்த மாற்றமா என தெரியவில்லை.

கடல் தண்ணீர் பல கடற்கரை பகுதியில் கடல் நீரின் மாற்றம் குறித்து அந்தந்த மீனவ கிராமங்களில் உள்ள தேவாலயத்தின் (சாமி) பாதிரியார்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் இடம் தெரிவித்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. கடல் தண்ணீர் நிறம் மாறியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கியதை போன்ற எந்த மாற்றமும், கடல் தண்ணீர் நிறம் மாறியுள்ள பகுதிகளில் இல்லை என்பது இறையருள் என நம்மிடம் சொல்லிய போது, அந்த மூத்த மீனவர்கள் சற்று தொலைவில் இருந்த தேவாலாய கோபுர உச்சியில் இருந்த சிலுவையை நோக்கி தலைக்கு மேல் இரண்டு கைகளையும் உயர்த்தி வணங்கியதையும் காண முடிந்தது.

த.இ.தாகூர், கன்னியாகுமரி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment