கன்னியாகுமரி இந்தியாவின் தென் கோடி என்பதுடன், இயற்கையின் அதிசயங்காளாக சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் நிலப்பரப்பு என்பதுடன் 3 கடல்கள் சங்கமிக்கும் பகுதி ஆகும். அதனால் இது சர்வதேச சுற்றுலா பகுதியாகும்.
கன்னியாகுமரி வரும் சுற்றுலா பணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதியாக. கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதனை அடுத்து இருக்கும் திருவள்ளுவர் சிலையும் உள்ளது. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது.
படகு பயணத்திற்கு இரண்டு வகையான கட்டணங்களை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வசூலிக்கிறது. ரூ.300 மற்றும் ரூ.75 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றுலா பயணிகளிடம் படகு கட்டணம் என்பது. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கும் சேர்ந்த கட்டணம் என்றாலும் அடிக்கடி கடல் நீர் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் சில நேரம் திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி மேற்கொள்ளப்படுவதில்லை.
இந்த பிரச்சனையை தீர்க்க சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு இடையே உள்ள கடல் பரப்பில் பாலம் அமைக்கவேண்டும் என்பது பல ஆண்டுகளாக மக்கள் முன்வைக்கும் கோரிக்கையாகும்.
இதையடுத்து தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி அமைந்த உடன் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. நெடுஞ்சாலை துறை மூலம் செயல்படுத்த திட்டமிட்டது. இதற்கான ஆய்வு பணிகளை துறை சார்ந்த அமைச்சர் எ.வா.வேலு, குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மனோ தங்கராஜ், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், உயர் அதிகாரிகள், அமைச்சர்களும் மேற்கொண்டனர். பாலம் அமையும் கடல் நீர் பரப்பு அதன் தன்மை ஆகியவை வரைபடங்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை முதல் கட்டமாக ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தொடக்கப் பணிகள் தொடங்கி பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் பொருட்களின் விலை ஏற்றத்தால் கூடுதல் நிதியாக ரூ.8 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.
தமிழக முதல்வரின் கனவு திட்டமான திருவள்ளுவர் சிலை பாறை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே பிளாஷ்டிக் இளை கண்ணாடி பாலத்திற்கான கான்கிரீட் தூண்களின் பணிகள் முழுமையடைந்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடல் பாலத்தின் பணிகள் விரைவில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலத்திற்கான கூண்டு 222_டன் எடை கொண்டதாம். கடல் காற்றின் உப்பு தன்மையால் எத்தகைய பாதிப்பும் அடையாத ஸ்டெயின் லெஸ் கம்பிகளால் ஆனது.மொத்தம் 101 பாகங்களை கொண்டது.
இதன் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு விரைவில் கன்னியாகுமரி வர உள்ளது. இந்த பாகங்களை கட்டப்பட்டுள்ள தூண்களில் இணைக்கும் பணிக்கான ராட்சத கிரேன் கடற்பரப்பு பகுதியில் நிறுவ இருப்பதாகவும் அந்த பணிகளை ஆய்வு செய்ய நெடுஞ்சாலை துறையை சேர்ந்த பொறியியல் வல்லுனர் குழுவினரும் குமரிக்கு வரவிருக்கின்றது. அதனால் பாலம் கட்டும் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“