கர்நாடகா மாநிலம் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த 10 மீனவர்களை விடுதலை செய்யக் வேண்டும் என தெற்காசிய மீனவர்கள் சகோதரத்துவம் சங்கம் மத்திய மீன்வளத்துறை அமைச்சருக்கும் கர்நாடகா, தமிழ்நாடு முதல்வர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த 10 மீனவர்களை கார்நாடகா மீனவர்கள் தாக்கியதாகவும் அவர்கள் மீது தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மீனவர்கள் சங்கங்கள் கூறுகின்றன.
கர்நாடாக மாநிலம் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், பிள்ளத்தோப்புவைச் சேர்ந்த, சி.ராபின்சன் (36), வாவுத்துறையைச் சேர்ந்த ஏ.அருள்ராஜ் (42), கன்னியாகுமாரியைச் சேர்ந்த டபிள்யூ.டென்னிஸ் (56), ஆழிக்கல்லைச் சேர்ந்த எஸ்.அருள்சீலன்(40), மனகுடியைச் சேர்ந்த சி.ஜோசப் அஜயன் (50), கடியபட்டனத்தைச் சேர்ந்த எஸ்.பிரவின் (18), எஸ்.சுபின், 20, முட்டத்தைச் சேர்ந்த ஜே.ரோஹன் டிஜோ, பெரியவிளையைச் சேர்ந்த வி.அபின் சாமுவேல், எறும்புகாடுவைச் சேர்ந்த ஆர்.சகரியா (27) ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த இந்த 10 மீனவர்கள் கர்நாடகா சிறையில் அடைப்பட்டிருப்பது குறித்து, தெற்காசிய மீனவர்கள் சகோதரத்துவம் சங்கத்தின் பொதுச் செயலாளர் சர்ச்சில் ஊடகங்களிடம் கூறுகையில், “அக்டோபர் 19ம் தேதி கோழிக்கோடில் உள்ள பேய்பூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இயந்திரப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கப் போனார்கள். அக்டோபர் 23ம் தேதி அவர்கள் கர்நாடகாவின் மால்பே கடற்கரையில் இருந்து 35 நாட்டிகள் மைல் தொலைவில் தூண்டில் வரி மீன்பிடியில் ஈடுபட்டனர். அப்போது, அவரக்ளை 400 கர்நாடகா மீனவர்கள் சுற்றி வளைத்தனர். அவர்கள் தமிழக மீணவர்களை தங்கள் படகுகளில் ஏறுமாறு கட்டாயப்படுத்தியதோடு ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். இதில் படகை ஓட்டிச் சென்ற ராபின்சனை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளார்கள். தாக்குதல் நடத்தியதோடு மட்டுமில்லாமல், தமிழக மீனவர்கள் மீது பொய் புகாரை அளித்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
ஆனால், கர்நாடகா மீனவர்கள், தமிழக மீனவர்கள் கடற்கரையிலிருந்து 9 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்ததாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கர்நாடகா மீனவர்கள், தமிழக மீனவர்களை கடற்கரைக்கு அருகில் மீன் பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறுகின்றனர்.
உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 10 பேர் மீது கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், கொடிய ஆயுதம் ஏந்தி கலவரம் செய்தல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"