கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையார் வனப்பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் யானை இப்போது உடல் மெலிந்த நிலையில் காணப்படுகிறது.
Advertisment
கன்னியாகுமரி மாவட்டம் அப்பர் கோதையார் பகுதியில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி, வனத்துறையால் அரிக்கொம்பன் யானை விடப்பட்டது. அதனை வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர்.
முத்துக்குழி பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த யானையின் உடலில் இருந்த காயங்கள் ஆறி, இயல்பு நிலைக்கு வந்ததால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
அந்த நாட்களில் மலைப்பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழையால், வனத்தின் பசுமையான பகுதியில் அரிகொம்பன் உறங்குவதை கண்காணித்த அதிகாரிகள் அதுகுறித்த அறிக்கைகளும் வெளியிட்டனர்.
Advertisment
Advertisements
இந்த பகுதியில் வசிக்கும் காணியின மக்களும் அரிகொம்பனின் நடமாட்டம் தங்களுக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வருவது தண்ணீர் தேடித்தான்.
அப்பர் கோதையார் பகுதியில் பல இடங்களில் நீர் ஊற்றுகள், அருவிகள் இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத பகுதி, என்றனர்.
வனப்பகுதியில் அரி கொம்பன் யானை
மலைப்பகுதியில் ஜாதிக்காய் விவசாயம் செய்யும் விவசாயிகளில் சிலர் சொன்ன தகவல்படி இந்த மலைப்பகுதியில் அரிகொம்பனை கொண்டும் விடும் முன்பே 30க்கும் அதிகமான யானைகள் இங்கு இருந்ததை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
அரி கொம்பன் குமரி மாவட்ட மலைப்பகுதிகளின் 1340 மீட்டர் கடல் மட்டத்தின் மேல் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் உள்ள நீரோடை பகுதியில் நடமாடியதை.ரேடியோ காலர் சிக்னல்கள் மூலம் தெரிந்து கொண்டதை வனத்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அரி கொம்பன் பற்றிய படங்கள் வெளியாகியது. இதில் அரிகொம்பன் யானை உடல் மெலிந்து இருப்பதை காண முடிந்ததாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறினர்.
இப்போது அரிகொம்பன் இருக்கும் அப்பர் கோதையார் பகுதியில் தண்ணீர், புற்கள், செடிகள், கொடிகள் மிகுந்த பகுதி. ஆனால் தளைகள் அதிகம் இல்லாத பகுதி.
இந்நிலையில் யானைக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது அச்சம் கொள்ள வேண்டிய பாதிப்பு அல்ல என விலங்குகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினரும், மருத்துவ குழுவினரும் தொடர்ந்து அரிகொம்பனின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு வனத்துறையினர் தெரிவித்தனர்.
செய்தி: த.இ.தாகூர், கன்னியாகுமரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil