கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இந்தப் படகு போக்குவரத்தின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வெள்ளிக்கிழமை (மார்ச் 17) முதல் அமலுக்கு வருகிறது.
இதைத் தொடர்ந்து, இதுவரை படகு பயணத்தின் கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில் இன்று முதல் ரூ.75 ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு பயணம் தடை படும் போதும் அதற்கான படகு கட்டணம் குறைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/