நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாகர்கோவில் கோணம் தொழில்நுட்ப பள்ளியில் மிகுந்த பாதுகாப்புடன் தொடங்கியது.
முன்னதாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகளிடம், காவல்துறையினர் படிவம் 18 உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறி தடுத்தனர். அதற்கு அவர்கள் படிவம்18 கொடுத்து தான் அடையாள அட்டையை வாங்கினோம் என பதில் சொல்ல அங்கு சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரி, பேச்சு நடத்தி கட்சி பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டார்கள்.
குமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“