பஹரின் நாட்டு கடல் பரப்பில் மாயமான குமரி மீனவர்கள் இரவரை மீட்டு தரக்கோரி அவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த சகாயசெல்சோ (37), ஆண்டனிவின்சென்ட்(33). இவர்கள் இருவரும் பஹரின் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடிக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 17 ம் தேதி இவர்கள் இருவரும் எப்போதும்போல இயந்திரத்தால் இயங்கும் பைபர் படகை எடுத்துக்கொண்டு கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் இவர்கள், கடந்த 19-ம் தேதி கரை திரும்ப வேண்டும். ஆனால் சகாயசெல்சோ, ஆண்டனிவின்சென்ட் ஆகிய இருவரும் கரை திரும்பாத நிலையில், இது தொடர்பான படகின் அதிபர் தராக் மாஜிக் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பஹ்ரைன் நாட்டை சேர்ந்த அனைத்து மீன்பிடி தொழிலாளர்களிடமும் குமரி மீனவர்கள் கடலில் காணாமல்போனது குறித்தும் அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் படகின் அதிபருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே குமரி மீனவர்கள் இருவர் கடலில் மாயமாகி 9_நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அவர்கள் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
மேலும் கடலில் காணாமல் போன மீனவர்கள் பஹ்ரைன் நாட்டு கடல் எல்லையை தாண்டி ஈரான் கடல் பரப்புக்கு சென்றிருந்தால் அந்த நாட்டு கடற்படை குமரி மீனவர்களை கைது செய்திருக்காலம் என்று கூறப்படுகிறது.இது குறித்து பஹ்ரைன் மற்றும் ஈரான் என நாட்டு தூதரகங்களிடமும், அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஹ்ரைன் கடலில் காணாமல்போன இரண்டு மீனவர்களையும் மீட்டு தரும்படி மீனவர்களின் குடும்பத்தினர் குழந்தைகள், உறவினர்கள், ஊர் தேவாலைய பங்கு தந்தை உடன் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்திடம் கோரிக்கை மனு கொடுத்தார்கள் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil