21 மேயர், துணை மேயர், 138 நகராட்சி தலைவர், துணைத் தலைவர், 489 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என, மொத்தம் 1,296 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. திமுக கட்சி தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. சில இடங்களில் உள்ள பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. ஆனால், பல இடங்களில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து மற்றொரு திமுக வேட்பாளர் போட்டியிடுவதும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெறும் சம்பவங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், கன்னியாகுமரியில் குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு நகராட்சிகளில் ஆகிய 3 நகராட்சிகளில் பாஜக கவுன்சிலர்கள் ஆதரவோடு போட்டி திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம், கன்னியாகுமரியில் உள்ள 4 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
குழித்துறை நகராட்சி
குழித்துறை நகராட்சி சேர்மன் வேட்பாளராக திமுக கட்சி பெர்லின் ஷீபாவை அறிவித்திருந்தது. ஆனால், அவரை எதிர்த்து குழித்துறை நகர தி.மு.க செயலாளர் பொன் ஆசைத்தம்பி போட்டியிட்டார். அவர்களுடன், காங்கிரஸ் சார்பில் பிரபின் ராஜாவும் போட்டியிட்டார்.

முதலில் நடந்த மறைமுகத் தேர்தலில், பெர்லினுக்கு 9 ஓட்டும், ஆசைத்தம்பிக்கு 10 ஓட்டும், பிரபின் ராஜாவுக்கு 2 ஒட்டும் கிடைத்தன. யாருக்கும் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காததால்,தேர்தல் நடைபெற்றது. இதில், பெர்லின் ஷீபா மற்றும் ஆசைத்தம்பி இருவர் மட்டுமே போட்டியிட்டனர்.
இதில், ஆசைத்தம்பிக்கு 12 ஓட்டுகளுககு, பெர்லினுக்கு அதே 9 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளைரை வீழ்த்தி, போட்டி திமுக வேட்பாளர் பொன் ஆசைத்தம்பி வெற்றிபெற்றார்.
குளச்சல் நகராட்சி
குழித்துறை நகராட்சி சேர்மன் வேட்பாளராக ஜான்சன் சார்லஸை திமுக தலைமை அறிவித்திருந்தது. ஆனால், அவரை எதிர்த்து திமுக போட்டி வெட்பாளராக நசீர் களமிறங்கினார். மொத்தவுள்ள 24 கவுன்சிலர்களில், இருவருக்கும் சமமாக 12 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, நடந்த குலுக்கல் முறையில் நசீர் வெற்றிபெற்றார்.

நகராட்சியில் தி.மு.க போட்டி வேட்பாளர்கள் பா.ஜ.க ஆதரவுடன் சேர்மன் பதவியை கைப்பற்றியுள்ளனர்.
கொல்லங்கோடு நகராட்சி
கொல்லங்கோடு நகராட்சி சேர்மன் பதவி தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், சி.பி.எம் வேட்பாளரை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளர் களமிறங்கினார். அதன்படி, சி.பி.எம் வேட்பாளராக லலிதா, தி.மு.க சார்பில் ராணி, பா.ஜ.க சார்பில் சுதா ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் சி.பி.எம் லலிதாவுக்கு 10 ஓட்டுகளும், தி.மு.க ராணிக்கு 18 ஓட்டுகளும், பா.ஜ.க சுதாவுக்கு 5 ஓட்டுகளும் கிடைத்தன. எனவே, தி.மு.க வேட்பாளர் ராணி வெற்றிபெற்றார்.

எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றியுள்ளது. பத்மநாபுரத்தில் தி.மு.க தலைமை அறிவித்த அருள் சோபன் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil