Kanyakumari MP Vasanthakumar tests positive: கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரொனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீப நாட்களாக சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
கொரோனா பாதித்த 4வது எம்.பி
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), செல்வராசு (நாகை), ராமலிங்கம் (மயிலாடுதுறை) ஆகிய எம்.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் நலம் பெற வாழ்த்து
குஷ்பூ
நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பூ தனது ட்விட்டரில், "அவர் தனது சொந்த காலில் நிற்கும் ஒரு மனிதர், மக்களுக்கு சேவை செய்வதில் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர். மிகவும் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையான மனிதர். விரைவில் அவர் குணமடைய வேண்டும்" என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத்
"கன்னியாகுமரி எம் பி யும், காங்கிரஸ் செயல் தலைவருமான அண்ணண் வசந்த குமார் அவர்களுக்கு கொரொனா உறுதி செய்யபட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்படுள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நலமாக இருக்கிறார். அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil