Thirunelveli | tuticorin | kanniyakumari | Tenkasi: தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படியே, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றது.
நெல்லை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம், முன்னெச்சரிக்கையாக குத்தாரபஞ்சன் அருவி, கன்னியாமாரன், ஓடைக்கு செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 2 மணிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. தூத்துக்குடி கடற்கரைசாலை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி மாநகர், ஆத்தூர், ஏரல், திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரபட்டினம், ஸ்பிக் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
'கலெக்டர் ஆபீசே முங்கி போச்சு': தூத்துக்குடி லாரி ஓட்டுநர்!https://t.co/gkgoZMHWlc | #NellaiRains | #TuticorinRains | #TenkasiDistrict | #KumariRains | 📹அபி சுதா pic.twitter.com/0yKaOFn9vQ
— Indian Express Tamil (@IeTamil) December 18, 2023
'மக்களின் வாழ்வாதாரமே மிகப்பெரிய அளவில் பாதிப்பு': கவலையில் பொதுமக்கள்!https://t.co/gkgoZMHWlc | #NellaiRains | #TuticorinRains | #TenkasiDistrict | #KumariRains | 📹அபி சுதா pic.twitter.com/IuabxNe5NB
— Indian Express Tamil (@IeTamil) December 18, 2023
— Indian Express Tamil (@IeTamil) December 18, 2023
திருநெல்வேலி , தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், தென்காசி போன்ற பகுதிகளில் இருந்து வரும் வீடியோக்களை பார்க்கவே...
Posted by Eav Suresh on Sunday, December 17, 2023
வெள்ளத்தில் மிதக்கும் செட்டிகுளம் திருநெல்வேலி #thirunelveli #TamilNaduRains #thoothukudi #reels
Posted by Divya Krishnan on Sunday, December 17, 2023
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பைபாஸ்
Posted by தென்காசித் தலபுராணம் on Sunday, December 17, 2023
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூத்துக்குடி திருநெல்வேலி பிரதான சாலை..
Posted by தமிழக வானிலை வலைதளம் - Rainman Studio -MasRainman on Sunday, December 17, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.