கன்னியாகுமரி ரயில்வே நிலையத்தை நவீனப்படுத்தும் ஆய்வு சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த மத்திய நாடாளுமன்ற இரயில்வே நிலைக்குழு உறுப்பினர்கள் 10 பேர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலக செய்தி குறிப்பில், “கன்னியாகுமரி இரயில் நிலையம் என்.எஸ்.ஜி-4 தரத்திற்கு உயர்த்தப்பட உள்ளது.
இதன்படி இரயில் நிலயத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இதற்காக ரூ.49.36 கோடி செலவிலான இந்த திட்டத்திற்கான நிலப்பரப்பு ஆய்வு பணிகள் நிறைவடைந்து விட்டன.
தற்போது மண் பரிசோதனை நடந்து வருகிறது. கன்னியாகுமரி இரயில் நிலையத்தின் முன் பகுதி விமான நிலைய தோற்றத்தை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்படுகிறது.
இதன் உள்கட்டமைப்பு வசதிகள், கார் நிறுத்துமிடம், பயணிகள் ஓய்வு அறை, மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி ஆகியவைகள் ஒரு விமான நிலையத்தில் எத்தகைய வசதிகள் உள்ளனவோ அத்தகைய வசதிகளை கொண்டதாக. கன்னியாகுமரி இரயில்வே நிலையம் உருவாக்க படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நவீனமாக்கும் பணிகள் 19 மாதத்தில் நிறைவடைகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/